|
UpComing New Tamil TV Channels and Its Details
|
|
01-27-2010, 02:14 PM
Post: #41
|
|||
|
|||
|
RE: UpComing New Tamil TV Channels and Its Details
ஏப்ரல் 14ம்தேதி உதயமாகிறது கேப்டன் டி.வி.
நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்தின் கேப்டன் டி.வி., வருகிற ஏப்ரல் மாதம் 14ம்தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. விஜயகாந்த் தே.மு.தி.க. என்ற கட்சியை தொடங்கியதைத் தொடர்ந்து தனது கட்சிக்கு என தனியாக டி.வி., சேனல் ஆரம்பிக்க இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து கேப்டன் டி.வி., தொடங்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்தன. பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், வருகிற ஏப்ரல் 14ம்தேதி முதல் கேப்டன் டி.வி., ஒளிபரப்பாக இருப்பதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கேப்டன் டி.வி., லோகோவை வெளியிட்ட விஜயகாந்த், மார்ச்ச 15ம்தேதி முதல் ஏப்ரல் 13ம்தேதி வரை கேப்டன் டி.வி.,யின் சோதனை ஒளிபரப்பு தொடங்கும் என்றும் தெரிவித்தார். இந்த டி.வி.,யில் நெடுந்தொடர்கள், ஹாலிவுட் படங்கள், லேட்டஸ்ட் தமிழ் படங்கள், செய்திகள் என பெண்கள், குழந்தைகள், இளைஞர்களை கவரும் வகையில் பல பொழுதுபோக்கு அம்சங்களுடனான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
|
|||
|
02-02-2010, 05:34 PM
Post: #42
|
|||
|
|||
|
RE: UpComing New Tamil TV Channels and Its Details
ஏப்ரல் முதல் கேப்டன் டி.வி.
ஏப்ரல் முதல் விஜயகாந்தின் கேப்டன் டி.வி. தனது ஒளிபரப்பை தொடங்குகிறது. "ரமணா' உள்ளிட்ட விஜயகாந்தின் ஹிட் படங்களை ஒளிபரப்பி மக்களின் கவனத்தை ஈர்க்கும் திட்டத்தை வைத்திருக்கிறாராம் விஜயகாந்த். தமிழகம் முழுவதும் ஒளிபரப்பு தடையின்றி கிடைக்க எஸ்.சி.வி.யுடன் பேச்சு நடத்த குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாம்.
|
|||
|
02-02-2010, 05:35 PM
Post: #43
|
|||
|
|||
|
RE: UpComing New Tamil TV Channels and Its Details
Really this is very good move. He is really nice and helpful person. If he comes to lead tamilnadu, I can asure you, he will make better than what we are now.
If you do not telecast what you have been preaching and doing for the public you will not reach to the common so it is right choice because sun tv and kalaignar tv are dominating in telecasting what they wanted to do. Be fierce in attacking the evils in the society and another suggestion do go for an alliance otherwise you will meet the fate of the great Vaiko.
|
|||
|
02-02-2010, 05:39 PM
(This post was last modified: 02-02-2010 05:39 PM by sathishgobi.)
Post: #44
|
|||
|
|||
|
RE: UpComing New Tamil TV Channels and Its Details
ஜீ தமிழ் மீண்டும் வட இந்தியரிடம்
திடீர் சரிவால் ஜீ தமிழ் பதிப்பு சேனல் மீண்டும் வட இந்திய நிர்வாகத்திடமே சென்று விட்டது. நிர்வாகத்தின் தலைமைக்கு தமிழ் தெரியாததால், செய்திகள் உள்ளிட்ட சில விஷயங்களில் ஆங்கிலத்தை மிக்ஸ் செய்ய சொல்லி நிகழ்ச்சி தயாரிப்புக்கு கட்டளையிட்டுள்ளதாம். இதனால் முதல்வர் என்பது சீப் மினிஸ்டர் ஆகியிருக்கிறது.
|
|||
|
02-02-2010, 05:40 PM
Post: #45
|
|||
|
|||
|
RE: UpComing New Tamil TV Channels and Its Details
இப்படியே சன் TV, விஜய் TV, ZTV போன்றவற்றை வட இந்தியர்களிடம் ஒப்படைத்து, தமிழனை முட்டாளாக்கிய தூர்தர்ஷன் போல் மீண்டும் முட்டாளாக்க வேண்டாம்.
|
|||
|
02-15-2010, 03:26 AM
Post: #46
|
|||
|
|||
|
RE: UpComing New Tamil TV Channels and Its Details
What is Kalaignar Murasu?
What kind of programmes will it show? |
|||
|
03-20-2010, 01:00 PM
Post: #47
|
|||
|
|||
|
RE: UpComing New Tamil TV Channels and Its Details
பஞ்ச் டயலாக்குடன் கேப்டன் டி.வி. சோதனை ஓட்டம்!
நான்காவது தூணில் மூன்றாவது கண்...! உள்ளது உள்ளபடி இனி கேப்டன் செய்திகளில் மட்டுமே! போன்ற பஞ்ச் வசனங்களுடன் கேப்டன் டி.வி., தனது சோதனை ஒளிபரபப்பை தொடங்கியுள்ளது. அரசியிலில் முக்கிய கட்சிகளிடம், கூட்டணி இல்லாமல் தனியாக போட்டியிட தயாரா? என்று சவால் விட்ட விஜயகாந்த், இப்போது முன்னணி கட்சிகளின் சேனல்களுக்கு போட்டியாக பஞ்ச் டயலாக்களை பேசத் தயாராகி விட்டார். தே.மு.தி.க.வுக்கு என தனி சேனல் தேவை என தொண்டர்கள் விரும்பியதால் கேப்டன் டி.வி., விரைவில் உதயமாகும் என அறிவித்த விஜயகாந்த், அதற்கான வேலைகளில் விறுவிறுப்பாக இறங்கி சோதனை ஒளிபரப்பையும் எட்டி விட்டார். நான்காவது தூணில் மூன்றாவது கண்... கேப்டன் டி.வி., என்பது போன்ற பஞ்ச் டயலாக்களுடன் ஓடிக் கொண்டிருக்கும் கேப்டன் டிவியில், ஏப்ரல் 14ம்தேதி முதல் வார நாட்களில் தொடர்கள், திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகலில் திரைப்படங்கள், சனி மற்றும் ஞாயிறு நாட்களில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பிறமொழிப் படங்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். முன்னணி சேனல்களுக்கு போட்டியாக பல புதிய படங்களை மடக்க இப்போதே முன்னணி சினிமா நட்சத்திரங்களுடன் 'கேப்டன் டீம்' பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாகவும் தகவல்.
|
|||
|
03-20-2010, 01:01 PM
Post: #48
|
|||
|
|||
|
RE: UpComing New Tamil TV Channels and Its Details
இனி பிள்ளைங்க கணக்கு பாடத்தில நல்ல புள்ளி ( மார்க்ஸ் தான்யா) எடுப்பாங்க. நீங்க தான் தமிழ்நாட்டுல எத்தனை பள்ளிக்கூடம், சென்னைல எத்தனை டாஸ்மார்க், கருணாநிதி வீட்டில எத்தனை லட்சம் இருக்கு, உங்க வீட்டில எத்தனை கோடி இல்லை, பிரேமலதா ஏன் நமீதா வை விட உசத்தி,,இன்னும் என்னென்ன எல்லாம் புள்ளி விவரத்தோட புட்டு புட்டு வெக்க போறிங்களே,,,,,நீங்க எல்லாம் என்ன செய்றீங்கலோ, எது செய்றீங்கலோ, தமிழ்நாட்டு ஜனங்கள் தலையில நல்ல மாவாட்டுறீங்க. இப்போ எல்லாம் புள்ள பொறந்த உடனேயே தலையில எழுதிடலாம். அடுத்த முதல்வர், ,,,, கையோட கையா சினிமா ல சேர்த்திடனும். பி, கு. திடீர்னு டிவி நின்னு போனா,,, தடங்கலுக்கு வருந்துகிறோம் னு சொல்லுவீங்களா,,,,இல்லாட்டில்,,, பாகிஸ்தான் செய்த சதியால் நிகழ்ச்சி தடைப்பட்டது னு சொல்லுவீங்களா....
|
|||
|
03-20-2010, 01:02 PM
Post: #49
|
|||
|
|||
|
RE: UpComing New Tamil TV Channels and Its Details
முஸ்லிம்,ஹிந்து,கிறிஸ்டின் மக்களுடைய ஒற்றுமைக்கு;சகோதரத்துவத்துக்கு உங்களால் முடிந்தவரை இந்த ஊடகத்தின் மூலம் சேவை செய்யுங்கள் ... வாழ்த்துகள் !
“ உங்க கேப்டன் டிவில இன்னக்கி காலைல பத்துமணிக்கு அந்த படம் போடுறோம்.... மத்தியானம் ஒருமணிக்கு இந்தபடம் போடுறோம்..... சாய்ந்தரம் ஆறுமணிக்கு அந்தபடத்தையும் இந்தப்படத்தையும் கலந்து போடுறோம்.... நைட் பதினோரு மணிக்கு பசங்களுக்கு பிடிச்ச அந்த பொண்ணு அப்புடி இப்புடி நடிச்ச அந்தபடம் போடுறோம் .... அதோட மறுஒளிபரப்பு நைட் முனு மணிக்கு போடுறோம்... நிகழ்ச்சியின் இடையே கேட்குற கேள்விக்கு தப்பா பதில் சொல்ற அனைவருக்கும் கேப்டன் நடிச்ச படத்தோட ஒர்ஜினல் சிடி கொடுக்குறோம்... இனிமேல எந்த டிவியும் பார்க்ககூடாது அவுங்க டிவியும் பார்க்ககூடாது ... மீறிபார்த்தா அவுங்கள தமிழ்நாட்ட விட்டு பத்துவருஷம் தள்ளி வைக்கிறேன் இதுதாண்டா இந்த சின்னகவுண்டரோட தீர்ப்பு. நான் வரேன்... ”
|
|||
|
06-03-2010, 10:27 AM
Post: #50
|
|||
|
|||
|
RE: UpComing New Tamil TV Channels and Its Details
கலைஞர் தொலைக்காட்சியின் சித்திரம்
வழக்கம் போல் இந்த முறையும் ஜூன்-3ம் தேதி சித்திரம் என்ற கார்ட்டூன் தொலைக்காட்சியை களம் இறக்குகிறது கலைஞர் குழுமம். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான இந்த தொலைக்காட்சியில் உலகப் புகழ் பெற்ற கார்ட்டூன் படங்களை இறக்கப் போகிறார்களாம். இதைத் தொடர்ந்து ஜெயா குழுமமும் ஒரு கார்ட்டூன் சேனலுக்கான திட்டத்தை வைத்திருக்கிறதாம். வரும் ஆண்டில் அதன் தொடக்கம் இருக்குமாம்.
|
|||
|
« Next Oldest | Next Newest »
|




